அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும், முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைக்கவும் பிரதமர் மோடி ஒரு நாள் பயணமாக அங்கு செல்ல உள்ளார். அந்த வகையில், ரூ.3,050 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
இந்த பயணத்தின்போது, விண்வெளி துறையில் தனியார் பங்களிப்பை ஊக்குவிக்கும் விதமாக அகமதாபாத் போபாலில் கட்டப்பட்டுள்ள IN-SPACe தலைமையகத்தை திறந்து வைக்கிறார்.