டெல்லி:பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் 24ஆம் தேதி ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். ஹரியானாவில் உள்ள ஃபரிதாபாதில் அம்ரிதா மருத்துவமனையை திறந்து வைக்கிறார். அதன் பின் பஞ்சாப்பில் ஹோமிபாபா புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தை திறந்துவைக்கிறார். இந்த மருத்துவமனையால் பஞ்சாப், ஹரியானா, ஹிமாச்சல பிரதேசம் உள்ளிட்ட அண்டை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேங்களில் உள்ள மக்களுக்கு உலகத்தரம் வாய்ந்த புற்றுநோய்க்கான சிகிச்சை கிடைக்கும்.
பஞ்சாப்பில் ரூ.660 கோடி மதிப்பில் புற்றுநோய் ஆராய்ச்சி மையம்... ஆகஸ்ட் 24ஆம் தேதி பிரதமர் திறந்து வைப்பு... - PM Modi to inaugurate Homi Bhabha Cancer Hospital
பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் 24 ஆம் தேதி பஞ்சாப் மாநிலத்தில் ரூ.660 கோடி மதிப்பில் கட்டப்பட்ட ஹோமி பாபா புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தை திறந்து வைக்கிறார்.
மத்திய அரசு அணு எரிசக்தித்துறை மற்றும் டாடா நினைவு மையத்தின் ரூ.660 கோடி நிதியுதவியால் இந்த மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. மொத்தம் 300 படுக்கை வசதிகள் கொண்டுள்ளது. இந்த மருத்துவமனையில் அனைத்துவிதமான புற்றுநோய்களுக்கும் சிகிச்சை அளிப்பதற்கான நவீன வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அறுவை சிகிச்சை, கதிரியக்க சிகிச்சை, கீமோதெரபி, நோய் எதிர்ப்பு சிகிச்சை, எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை உள்ளிட்ட சிகிச்சைகள் அளிக்கப்படும்.
இதையும் படிங்க:நீங்கள் தான் புத்திசாலித்தனமான கட்சி என்று நினைக்காதீர்கள்... திமுகவை சாடிய உச்ச நீதிமன்றம்...