இந்தியா-வியட்நாம் ஆகிய இரு நாடுகளிடையே காணொலி வாயிலாக, பிரதமர் நரேந்திர மோடி இன்று (டிசம்பர் 21) வியட்நாம் பிரதமர் நுயேன் ஜுவான் புக்குடன் உச்சி மாநாட்டில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி- நுயேன் ஜுவான் புக் இடையே உச்சி மாநாடு - வியட்நாம் பிரதமர் நுயேன் ஜுவான் புக்
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி, வியட்நாம் நாட்டின் பிரதமர் நுயேன் ஜுவான் புக் ஆகியோருக்கு இடையிலான மெய்நிகர் உச்சி மாநாடு இன்று (டிசம்பர் 21) நடைபெற உள்ளது.

virtual summit
இந்த உச்சி மாநாட்டில் இரு நாடுகள் இடையிலான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துதல், பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்தும், எதிர்கால வளர்ச்சிக்கான வழிகாட்டுதல்களை வழங்குதல் குறித்தும் பேச்சுவார்த்தை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக பிப்ரவரி 2020 வியட்நாம் துணைத் தலைவர் டாங் தி நொகோக் தின் அலுவலகப் பயணமாக இந்தியா வந்தது குறிப்பிடத்தக்கது. பின்னர் கடந்த ஏப்ரல் மாதத்தில் கரோனா நோய்த்தொற்று குறித்து இரு நாட்டு பிரதமர்களும் தொலைபேசி மூலம் கேட்டறிந்துகொண்டார்.