பிரதமர் நரேந்திர மோடி, ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி ஆகிய இருவரும் இன்று (பிப். 9) உச்சிமாநாட்டில் காணொலி மூலமாக கலந்துகொள்கின்றனர். இந்த மாநாட்டுப் பேச்சுவார்த்தையில் ஷாஹூத் அணை தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா கட்டமைத்துவரும் ஷாஹூத் அணை ஒப்பந்தம் மூலம் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் வசிக்கும் 20 லட்சம் பேருக்கு குடிநீர் கிடைக்கும். அதுமட்டுமின்றி, இதன்மூலம் விவசாயமும் செய்யலாம்.