நாட்டின் தடுப்பூசித் திட்டம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி அலுவல் ரீதியான ஆய்வு மேற்கொண்டார். தடுப்பூசி குறைவாக செலுத்தப்பட்டுள்ள மாநில முதலமைச்சர்கள், 40 மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட உயர் அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
பிரதமர் மோடி பேசுகையில், "கூட்டத்தில் பங்கேற்ற முதலமைச்சர்களுக்கு நன்றி. இது இந்த நூற்றாண்டில் மிகப் பெரிய பெருந்தொற்று. மாவட்ட நிர்வாகிகள் தங்களது மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்துவதை அதிகரிக்க புதுமையான வழிகளை கையாள வேண்டும்.
நுண் உத்திகளை உருவாக்கி அனுபவங்களை கருத்தில் கொண்டு தடுப்பூசி செலுத்துவதில் உள்ள இடைவெளியைப் பூர்த்தி செய்ய வேண்டும். மாவட்ட அதிகாரிகள் தங்கள் மாவட்டங்களில், தேவைப்பட்டால் ஒவ்வொரு கிராமத்திற்கும், ஒவ்வொரு நகரத்திற்கும் வேறுபட்ட உத்திகளை கடைபிடிக்க வேண்டும்.
மக்களிடையே தடுப்பூசி செலுத்துவதற்கான அவசரம் குறைந்துள்ளது. குறிப்பிட்ட கால இடைவெளியில் இரண்டாவது தவணை செலுத்தாதவர்களை நீங்கள் தொடர்பு கொண்டு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வலியுறுத்த வேண்டும். இதை புறக்கணித்தால் உலகின் பல நாடுகளில் ஏற்பட்டது போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்” என்று அவர் எச்சரித்தார்.
இதையும் படிங்க:சாதிபடுத்தும்பாடு - தினமும் 150 கிலோ மீட்டர் பயணம் செய்யும் ஆசிரியர்!