உத்தரப் பிரதேசத்தில் அலிகார் நகரில் அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகம் 1875ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இதன் நூற்றாண்டு விழா வருகிற 22ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்வார் என்று அதிகாரப்பூர்வமாகத் தகவல் வெளியாகி உள்ளது. மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்குடன் பிரதமர் மோடி கலந்து கொள்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக நூற்றாண்டு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு! - அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம்
லக்னோ: அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி வாயிலாகக் கலந்துகொள்வார் என அதிகாரப்பூர்வமாகத் தகவல் வெளியாகியுள்ளது.

PM Modi
அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் தாரிக் மன்சூர் கூறுகையில், பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழாவில் கலந்துகொள்ள பிரதமர் ஒத்துக்கொண்டது மகிழ்ச்சியளிக்கிறது. பல்கலைக்கழகம் சார்பாக அவருக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம் என்றார்.
மேலும், கல்லூரி ஊழியர்கள், மாணவர்கள், முன்னாள் மாணவர்கள், பல்கலைக்கழக நலன் விரும்பிகள் இவ்விழாவில் பங்கேற்க பேராசிரியர் தாரிக் மன்சூர்அழைப்புவிடுத்துள்ளார்.