ஏப்ரல் ஆறாம் தேதி பாஜகவின் 41ஆவது ஆண்டு தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள பாஜக தொண்டர்களிடம் பிரதமர் மோடி உரையாற்றவுள்ளார்.
அவருடன் பாஜக அகில இந்திய தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவும் உரையாற்றுகிறார். இந்நிகழ்ச்சி ஏப்ரல் ஆறாம் தேதி காலை 10:30 மணிக்கு ஒளிபரப்பப்படுகிறது.
அதே நாளில் தமிழ்நாடு உள்ளிட்ட நான்கு மாநிலங்கள்ம், ஒரு யூனியன் பிரதேசத்திலும் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது.
பாஜக முதலில் பாரதிய ஜன சங்கமாக சியாமா பிரசாத் முகர்ஜி என்பவரால் 1951இல் நிறுவப்பட்டது. பின்னர் இச்சங்கம் 1977இல் பல கட்சிகளுடன் இணைக்கப்பட்டு பாரதிய ஜனதா கட்சியாக உருவாகியது.
இதையும் படிங்க: மம்தாவுக்கு எச்சரிக்கை விடுத்த தேர்தல் ஆணையம்!