டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி, 77ஆவது மனதின் குரல் நிகழ்ச்சியில் இன்று (மே.30) காலை 11 மணிக்கு உரையாற்றவுள்ளார்.
'மான் கி பாத்' நிகழ்வில் பிரதமர் உரை! - அகில இந்திய வானொலி
'மனதின் குரல்' (மான் கி பாத்) நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 11 மணிக்கு உரையாற்றுகிறார்.
பிரதமர் நரேந்திர மோடி
இதில், 'தற்சார்பு இந்தியா' (ஆத்ம நிர்பார் பாரத்) குறித்து அவர் உரை நிகழ்த்தவுள்ளார். கரோனா தொற்றின் இரண்டாவது அலையில் நாட்டு மக்கள் அல்லல்பட்டு கிடக்கும் வேளையில், பிரதமரின் இந்த உரை மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
இந்த நிகழ்வு அகில இந்திய வானொலி மூலமும், தூர்தர்ஷன் தொலைக்காட்சி வாயிலாகவும் ஒளிபரப்படுகிறது. மேலும், www.newsonair.com இணையதளம் / newsonairகைபேசி செயலியின் வாயிலாகவும் மக்கள் இதனை கேட்கலாம்.