டெல்லி:பிரதமர் மோடியின் பரிந்துரையை ஏற்று 2015ஆம் ஆண்டு ஐநா ஜூன் 21ஆம் தேதியை உலக யோகா தினமாக அறிவித்தது.வரும் ஜூன் 21ஆம் தேதி, 7ஆவது சர்வேதச யோகா தினம் கொண்டாடப்படவுள்ளது. இந்த தினத்தையொட்டி நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி உரையாற்றி சில யோகாக்களையும் செய்யவுள்ளார். இது அரசு தொலைக்காட்சியான தூர்தர்ஷன் தளங்களில் காலை 6.30 மணிக்கு நேரடி ஒளிபரப்பப்படும்.
7ஆவது சர்வேதச யோகா தினத்தின் கருப்பொருள் 'ஆரோக்கியத்திற்கான யோகா' என ஆயுஷ் அமைச்சகம் தெரிவித்துள்ளது. கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக இந்நிகழ்வு இணைய வழியாக நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில், பல்லாயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளில் இருந்தவாறு கலந்துகொள்ள உள்ளனர். மேலும், வெளிநாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்கள் வாயிலாகவும் இந்நிகழ்வு ஒருங்கிணைக்கப்படுகிறது.