நாடு முழுவதும் உள்ள 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வுகளால் ஏற்படும் மனஅழுத்தத்தில் இருந்து மீளும் வகையில் மத்திய அரசு, 2018ஆம் ஆண்டில் 'பரிக்ஷா பே சார்ச்சா' என்னும் கலந்துரையாடல் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது. இந்த நிகழ்வுக்காக 9 முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு போட்டி தேர்வுகள் நடத்தப்படும்.
அதில் வெற்றி பெறும் மாணவர்கள், அவர்களுடைய பெற்றோர், ஆசிரியர்களுடன் பிரதமர் மோடியுடன் நேரடியாக கலந்துரையாட அனுமதிக்கப்படுவர். இந்த நிகழ்வு நான்கு ஆண்டுகளாக நடைபெற்றுவருகிறது. அந்த வகையில் இந்தாண்டு டெல்லி டல்கோத்ரா விளையாட்டு அரங்கில், மாணவர்களுடன் பிரதமர் மோடி இன்று (ஏப்ரல் 1) கலந்துரையாடி வருகிறார்.