தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

3 மாநில தேர்தல் முடிவுகள் - பிரதமர் நன்றி! - பிரதமர் மோடி

திரிபுரா, நாகலாந்து மற்றும் மேகாலயா ஆகிய 3 மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் குறித்து காணலாம். அதற்கு பிரதமர் மோடியின் ரியாக்‌ஷனை தெரிந்துகொள்ளலாம்.

3 மாநில தேர்தல் முடிவுகள் - பிரதமர் நன்றி!
3 மாநில தேர்தல் முடிவுகள் - பிரதமர் நன்றி!

By

Published : Mar 2, 2023, 8:22 PM IST

சென்னை:கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி திரிபுரா மாநிலத்திலும், அதனைத் தொடர்ந்து பிப்ரவரி 27ஆம் தேதி நாகலாந்து மற்றும் மேகாலயா ஆகிய 2 மாநிலங்களிலும் சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. இதில் திரிபுரா மாநிலத்தில் உள்ள 60 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது.

இதனையடுத்து மேகாலயா மாநிலத்தில் உள்ள 60 தொகுதிகளில் 59 தொகுதிகளுக்கு மட்டுமே சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. ஏனென்றால், ஐக்கிய ஜனநாயக கட்சி வேட்பாளர் உயிரிழந்ததால், அந்த ஒரு தொகுதிக்கு மட்டும் தேர்தல் நடைபெறவில்லை.

அதேபோல் நாகலாந்து மாநிலத்திலும் மொத்தம் உள்ள 60 தொகுதிகளில், ஒரு தொகுதியில் பாஜக வேட்பாளர் போட்டியின்றி வெற்றி பெற்றதால், மீதம் உள்ள 59 தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெற்றது. இந்த நிலையில் இன்று (மார்ச் 2) காலை 8 மணி முதல் 3 மாநில சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.

இந்த நிலையில் திரிபுரா மாநிலத்தில் பாஜக - திரிபுரா பூர்வகுடி மக்கள் முன்னணி கூட்டணி 33 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதேநேரம் சிபிஐ (எம்) கூட்டணி 14 இடங்களிலும், திப்ரா மோத்தா கட்சி 13 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. நாகாலாந்து மாநிலத்தில் பாஜக 38 இடங்களிலும், தேசிய மக்கள் கட்சி 4 இடங்கள், நாகா மக்கள் முன்னணி 2 இடங்கள் மற்றும் பிற கட்சிகள் 16 இடங்களையும் கைப்பற்றி உள்ளன.

ஆனால், காங்கிரஸ் 1 இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. மேலும் மேகாலயா மாநிலத்தில் தேசிய மக்கள் கட்சி 27 இடங்கள், காங்கிரஸ் 5, திரிணாமுல் 5, பாஜக 2 மற்றும் இதர கட்சிகள் 20 இடங்களையும் கைப்பற்றி உள்ளன. இதில் 2 மாநிலங்களில் பாஜக மற்றும் பாஜக கூட்டணி வெற்றி வாகை சூடியுள்ளது.

அதேநேரம் ராகுல் காந்தியின் பாரத் ஜோடா யாத்ரா பயணத்துக்கு பிறகு, இந்த தேர்தலில் காங்கிரஸ் பெற்ற இடங்கள், பெரும் பின்னடவை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பாஜகவின் வெற்றிக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ”பாஜக - தேசிய மக்கள் கட்சிக்கு ஆதரவளித்த நாகாலாந்து மக்களுக்கு நன்றி. இந்த அரசு, மாநிலத்தின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து பாடுபடும். இந்த முடிவை உறுதி செய்த எங்கள் கட்சியினரின் கடின உழைப்பை நான் பாராட்டுகிறேன்” எனவும்,

“மாநிலத்தின் முன்னேற்றத்திற்காக எங்களுக்கு வாக்களித்த திரிபுரா மக்களுக்கு நன்றி. இதற்காக பாடுபட்ட திரிபுரா பாஜகவினருக்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றும், “எங்களுக்கு ஆதரவளித்த மேகாலயா மக்களுக்கு நன்றி. மேகாலயா மாநிலத்தின் முன்னேற்றம் மற்றும் அம்மாநில மக்களின் மேம்பாட்டுக்கு தொடர்ந்து பாடுபடுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:அதானி குழும முறைகேடு வழக்கில் உச்ச நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details