மார்ச் 1ஆம் தேதியிலிருந்து 2ஆம் கட்ட தடுப்பூசித் திட்டத்தில் பொது மக்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட உள்ளது. மூத்த குடிமக்கள், ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்கள் இருக்கும் 45+ வயதினர் தடுப்பூசிக்காக கோ-வின் (Co-WIN), ஆரோக்கிய சேது செயலி மூலம் காலை 9 மணி முதல் தடுப்பூசி போட்டுக்கொள்ள பதிவு செய்யலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
'கோவாக்ஸின்' கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பிரதமர் மோடி
07:16 March 01
டெல்லி: எய்ம்ஸ் மருத்துவமனையில் பிரதமர் நரேந்திர மோடி முதல்முறையாக கோவாக்ஸின் தடுப்பூசியை எடுத்துக்கொண்டார். இதனைத்தொடர்ந்து நாடு முழுவதும் இரண்டாம் கட்ட தடுப்பூசித்திட்டம் தொடங்குகிறது.
இந்நிலையில் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று(மார்ச்.1) இரண்டாம்கட்ட தடுப்பூசியின் முதல் டோஸை போட்டுக்கொண்டார்.
இதுகுறித்து பிரதமர் மோடி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது , 'என்னுடைய முதல் தவணை கரோனா தடுப்பூசியை எய்ம்ஸ் மருத்துவமனையில் எடுத்துக்கொண்டேன். நமது மருத்துவர்களும் விஞ்ஞானிகளும் வேகமாகப் பணி செய்து, கரோனா தொற்றுக்கு எதிராக குறிப்பிடத்தக்க பலத்தை உலகளவில் பெற்றுள்ளனர்.
தடுப்பூசி எடுக்கத் தகுதியுள்ள அனைவரும் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளும்படி நான் வேண்டுகோள்விடுக்கின்றேன். நாம் அனைவரும் ஒன்றிணைந்து கரோனா இல்லாத இந்தியாவை உருவாக்குவோம்' எனத் தெரிவித்துள்ளார்.