பெங்களூரு:கர்நாடக மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி இன்று (நவம்பர் 11) பெங்களூரு கேஎஸ்ஆர் ரயில் நிலையத்தில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மற்றும் பாரத் கவ்ரவ் கஷி தர்ஷன் ரயில் போக்குவரத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதன்பின் நண்பகல் 12 மணி அளவில், கெம்பேகவுடாவின் 108 அடி உயரம் உள்ள வெண்கலச் சிலையை திறந்துவைத்தார்.
மறக்கமுடியாத வரவேற்பு அளித்த "டைனமிக் சிட்டி" தொண்டர்களுக்கு நன்றி... பிரதமர் மோடி நெகிழ்ச்சி... - பிரதமர் நரேந்திர மோடி பெங்களூரு பயணம்
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனால் பிரதமர் மோடி காரை விட்டு கீழிறங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

முன்னதாக கேஎஸ்ஆர் ரயில் நிலையம் அருகே பிரதமரின் கான்வாய் சென்றது. அப்போது ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மோடி, மோடி என்று கோஷமிட்டு உற்சாகத்தை வெளிப்படுத்தினர். இதனால் நெகிழ்ச்சியடைந்த பிரதமர் மோடி காரை விட்டு கீழிறங்கி, அங்கு கூடியிருந்தவர்களிடையே தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அதன்பின் தனது ட்விட்டர் பக்கத்தில், "மறக்கமுடியாத வரவேற்பு அளித்த "டைனமிக் சிட்டி" தொண்டர்களுக்கு நன்றி" எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க:இன்று திண்டுக்கல் வருகிறார் மோடி...பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்..