டெல்லி: தடுப்பூசி வழங்குவது தொடர்பாகவும், அமெரிக்க இந்திய நட்புறவு, சுகாதார சங்கலியை மேம்படுத்துவது தொடப்பாக கமலா ஹாரிஸ் பிரதமர் மோடியுடன் தொலைப்பேசி வாயிலாக பேசியுள்ளார்.
பிரதமர் மோடியுடன் பேசிய அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ்! - அமெரிக்க இந்திய நட்புறவு
தடுப்பூசி பகிர்வு, உலக சுகாதாரம், பொருளாதாரம் மீட்சி குறித்து அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் பிரதமர் மோடியுடன் தொலைப்பேசி வாயிலாக உரையாடினார்.
இதுகுறித்து ட்வீட் செய்துள்ள பிரதமர் மோடி, அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் உடன் தொலைப்பேசியில் பேசினேன். உலக நாடுகளுக்கு தடுப்பூசி வழங்கும் அமெரிக்க கொள்கையின் படி, இந்தியாவிற்கும் தடுப்பூசி வழங்க இருப்பதாக அளித்த உறுதியை நான் வெகுவாக பாராட்டுகிறேன். அமெரிக்க அரசு, வியாராரிகள், அங்குவாழும் புலம்பெயர்ந்தோரின் ஆதரவுக்காக நான் அவர்களுக்கு நன்றி தெரிவித்தேன்.
நாங்கள், இந்திய அமெரிக்க தடுப்பூசி ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும், கோவிட்-19க்கு பிந்தைய உலக சுகாதாரம், பொருளாதாரத்தை பற்றி விவாதித்தோம் எனத் தெரிவித்துள்ளார்.