டெல்லி: மன் கி பாத் நிகழ்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ராதிகா சாஸ்திரி என்ற பெண்மணியின் சேவையைப் பாராட்டியும், ஐஐடி மெட்ராஸ் மாணவர்களின் ஸ்டார்ட்அப்பை சுட்டிக்காட்டியும் பிரதமர் மோடி உரையாற்றினார்.
அவரது உரையில், 'தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ராதிகா சாஸ்திரி என்பவர், மலைப்பகுதிகளில், நோயாளிகளை சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல, எளிதாக வாகன வசதி கிடைக்க வேண்டும் என்பதற்காக ஆட்டோ அவசர ஊர்தி திட்டத்தை ஆரம்பித்தார். இதற்காக, அவர் நடத்தும் தேநீர் கடையில் பணியாற்றுபவர்களிடம் பணம் சேகரித்தார். இன்று 6 ஆட்டோ அவசர ஊர்திகள் செயல்படுகின்றன’ என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், 'நண்பர்களே, நாம் நமது பணி, நமது தொழில், வேலை ஆகியவற்றைச் செய்து கொண்டே, சேவையில் ஈடுபட முடியும் என்பதை ராதிகா சாஸ்திரி போன்றவர்களின் செயல்பாடுகள் புரிய வைக்கின்றன' என்று மெச்சினார்.