தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இங்கிலாந்து அரசர் சார்லஸூடன் ஜி20 குறித்து உரையாடிய பிரதமர் மோடி - மூன்றாம் சார்லஸ் உடன் உரையாடிய பிரதமர் மோடி

இங்கிலாந்து அரசர் மூன்றாம் சார்லசஸூடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி மூலம் உரையாடினார்.

இங்கிலாந்து அரசர் சார்லஸூடன் ஜி20 குறித்து உரையாடிய பிரதமர் மோடி
இங்கிலாந்து அரசர் சார்லஸூடன் ஜி20 குறித்து உரையாடிய பிரதமர் மோடி

By

Published : Jan 4, 2023, 7:39 AM IST

Updated : Jan 4, 2023, 12:54 PM IST

டெல்லி:பிரதமர் நரேந்திர மோடி நேற்று (ஜனவரி 3) இங்கிலாந்து அரசர் மூன்றாம் சார்லஸூடன் தொலைபேசி மூலம் உரையாடினார். மூன்றாம் சார்லஸ் இங்கிலாந்து அரசராக பதவி ஏற்ற பிறகு, பிரதமர் மோடி முதல் முறையாக தொலைபேசி மூலம் உரையாடி தனது வாழ்த்துகளைத் தெரிவித்து கொண்டார். இரு நாட்டுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள் குறித்து இந்த உரையாடலில் பேசப்பட்டன. அதோடு காலநிலை மாற்றம் குறித்த நடவடிக்கை, பல்லுயிர் பாதுகாப்பு, எரிசக்தி மாற்றத்திற்கு நிதி உதவி செய்வதற்கான புத்தாக்க தீர்வுகள் உள்ளிட்டவை குறித்து பேசப்பட்டன.

இந்தியா மீதான இங்கிலாந்து அரசரின் அக்கறை மற்றும் இணைந்து செயலாற்றும் தன்மையை பிரதமர் பாராட்டியுள்ளார். அதேபோல, இந்தியாவின் ஜி20 தலைமைத்துவத்தின் முக்கியத்தும் குறித்து இங்கிலாந்து அரசருக்கு பிரதமர் மோடி விளக்கம் அளித்துள்ளார். குறிப்பாக டிஜிட்டல் முறையில் பொதுமக்கள் சேவைகளை பரவலாக்குவது தொடர்பான நடவடிக்கைகள் சம்பந்தமாக தெளிவுப்படுத்தியுள்ளார்.

சுற்றுச்சூழலுக்கு தகுந்த வாழ்வியல் முறைத்திட்டத்தை இந்தியா எவ்விதம் முன்னெடுத்து செல்கிறது என்பது பற்றியும் இங்கிலாந்து அரசரிடம் எடுத்துக் கூறினார். இங்கிலாந்தில் உள்ள இந்திய வம்சாவழியினர், இரு நாடுகளுக்கும் இடையே ஒரு இணைப்புப் பாலமாக செயல்பட்டு இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும் வழியில் சிறப்பாக செயல்பட்டு வருவதாக தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:"வேலுநாச்சியாரின் தீரம் தலைமுறைகளை தாண்டி உத்வேகம் அளிக்கும்" - பிரதமர் மோடி பெருமிதம்

Last Updated : Jan 4, 2023, 12:54 PM IST

ABOUT THE AUTHOR

...view details