ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படை விலகல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ள நிலையில் அங்கு தாலிபான் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. ஆகஸ்ட் 15ஆம் தேதி தலைநகர் காபூலை தாலிபான் முழுமையாகக் கைப்பற்றிய நிலையில், அதிபராக இருந்த அஷ்ரஃப் கானி நாட்டைவிட்டு வெளியேறினார்.
இதன் காரணமாக அங்கு அசாதாரண சூழல் நிலவிவருகிறது. அங்கு தங்கியிருக்கும் தங்கள் குடிமக்களை மீட்கும் பணியில் சர்வதேச நாடுகள் மும்முரமாக இறங்கியுள்ளன. இந்நிலையில் ஏஞ்சலா மெர்கலுடன் நரேந்திர மோடி தொலைபேசியில் உரையாடியுள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "ஆப்கனில் நிலவும் பாதுகாப்புச்சூழல், அதன் காரணமாக சர்வதேச அரங்கில் ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.