டெல்லி: கஸ்தூரிபாய் காந்தி மார்க் மற்றும் ஆப்பிரிக்க அவென்யூ பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு துறையின் புதிய அலுவலக வளாகங்களை பிரதமர் மோடி இன்று (செப்.16) திறந்துவைத்தார்.
அதன் பின் ராணுவம், கடற்படை, விமானப்படை அலுவலர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், "டெல்லி இன்று புதிய இந்தியாவின் பார்வைக்கு ஏற்ப முன்னேறி வருகிறது. இந்தப் புதிய பாதுகாப்பு அலுவலக வளாகங்கள் நவீன வசதிகளுடனும் சிறந்த தொழில்நுட்பங்களுடனும் அமைக்கப்பட்டுள்ளது.
தற்சார்பு இந்தியாவின் சின்னமாக, இந்த வளாகங்களில் இந்திய கலைஞர்களின் கண்கவர் கலை பொருட்கள் இடம்பெற்றிருப்பது பாராட்டிற்குரியது" என்றார்.
டெல்லி பற்றி பேசிய அவர், ”நாட்டின் தலைநகரம், அந்நாட்டின் சிந்தனை, உறுதித் தன்மை, வலிமை மற்றும் கலாசாரத்தின் சின்னமாக செயல்பட வேண்டும். எளிதான வர்த்தகத்தை மேற்கொள்வதற்கு நவீன உள்கட்டமைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது.