தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இந்தியா - வங்காளாதேசம் நட்புறவு பைப்லைன் திட்டம் - இரு நாட்டு பிரதமர்கள் துவக்கி வைப்பு! - PM Modi

இந்தியாவில் இருந்து குழாய் மூலம் வங்காளதேசத்திற்கு எரிபொருள் கொண்டு செல்லும் நட்புறவு பைப் லைன் திட்டத்தை பிரதமர் மோடி, வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா ஆகியோர் இன்று துவக்கி வைக்கின்றனர்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Mar 18, 2023, 2:37 PM IST

டெல்லி:இந்தியாவிலிருந்து வங்காளதேசத்துக்கு குழாய்கள் மூலம் எரிபொருள் அனுப்பும் நட்புறவு ரீதியிலான பைப்லைன் திட்டத்தை பிரதமர் மோடியும், வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினாவும் காணொலி மூலம் இன்று தொடங்கி வைக்கின்றனர். இரு நாடுகளிடையேயான பரஸ்பர ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக முதல் எல்லை தாண்டிய எரிபொருள் குழாய் அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த நட்புறவு பைப்லைன் திட்டத்தின் மூலம் வங்காளதேசத்தின் வடக்கு பகுதியில் உள்ள 7 மாவட்டங்களுக்கு சீரான அதேநேரம் அதிவேகமாக எரிபொருள் சப்ளை செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஒட்டுமொத்தமாக 377 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டு உள்ள இந்த திட்டத்தில் இந்திய அரசின் மானியத்துடன் 285 கோடி ரூபாய் மதிப்பில் இந்த திட்டத்தை வங்காளதேச அரசு முடித்து உள்ளது.

இந்த எரிபொருள் குழாய் மூலம் ஆண்டுக்கு 1 மில்லியன் மெட்ரிக் டன் அளவில் அதிவேக டீசல் கொண்டு செல்ல முடியும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த பைப்லைன் திட்டத்தின் மூலம் வங்களா தேசத்தின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள ஏழு மாவட்டங்களுக்கு ஆரம்பத்தில் அதிவேகமாக டீசல் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நட்புறவு பைப்லைன் திட்டத்தின் மூலம் எரிபொருள் கொண்டு செல்வது இந்தியா - வங்களாதேசம் இடையிலான நட்பு, நிலையான உறவு, நம்பகமான, செலவு குறைந்த மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையிலான திட்டங்களை ஊக்குவிக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இன்று (மார்ச்.18) மாலை 5 மணிக்கு நடைபெறும் விழாவில் காணொலி காட்சி மூலம் இந்திய பிரதமர் மோடி மற்றும் வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா இந்த திட்டத்தை துவக்கி வைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க:சிறுதானிய சந்தை வளர்ச்சியால் 2.5 கோடி விவசாயிகள் பலன் - சர்வதேச சிறுதானிய மாநாட்டில் பிரதமர் மோடி!

ABOUT THE AUTHOR

...view details