ஒலிம்பிக் ஹாக்கி வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் பிரிட்டனுடன் போட்டியிட்ட இந்திய பெண்கள் ஹாக்கி அணி போராடி தோல்வியடைந்தது. பிரிட்டன் அணி 4-3 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தியது.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "மகளிர் ஹாக்கி போட்டியில் நூலிழையில் பதக்கத்தைத் தவறவிட்டோம். இந்திய ஹாக்கி வீராங்கனைகள் தங்களது முழு திறமையையும் வெளிப்படுத்தி விளையாடினர்.
ஒலிம்பிக்கில் அணியின் மிகச்சிறந்த முன்னேற்றம் இந்தியாவின் இளம் பெண்களை ஹாக்கி விளையாட்டை நோக்கிச் செல்ல ஊக்குவிக்கும். அவர்களைக் குறித்து பெருமைகொள்வோம். இந்திய அணியின் சிறப்பான செயல்திறனை எப்போதும் நினைவில் கொள்வோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ட்வீட் தொடர்ந்து, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், இந்திய மகளிர் ஹாக்கி அணி, சிறப்பாக விளையாடி அனைவரின் நெஞ்சங்களிலும் இடம்பிடித்துள்ளனர். உங்களை நினைத்து நாங்கள் பெருமை கொள்கிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:தோற்றது ஹாக்கி அணி அல்ல இந்தியா எனும் நாடு - வெல்டன் வந்தனா