தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கேல் ரத்னா விருது பெயர் மாற்றம் - பிரதமர் மோடி - PM Modi

modi
பிரதமர் மோடி

By

Published : Aug 6, 2021, 12:39 PM IST

Updated : Aug 6, 2021, 1:08 PM IST

12:35 August 06

விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கும் ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருது, இனி மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா என்ற பெயரில் வழங்கப்படும் எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி ட்வீட்

விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் வீரர்கள், வீராங்கனைகளுக்கு மத்திய அரசின் சார்பில் உயரிய விருதான ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டுவருகிறது.

இந்நிலையில் தற்போது பிரதமர் மோடி ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருது பெயர் மாற்றப்படுவதாக அறிவித்துள்ளார். இனி இவ்விருது இந்திய ஹாக்கி ஜாம்பவானான மேஜர் தயான்சந்த் பெயரில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "கேல் ரத்னா விருதுக்கு மேஜர் தயான் சந்த் பெயரைச் சூட்டுமாறு நாடு முழுவதும் உள்ள குடிமக்களிடமிருந்து எனக்குப் பல்வேறு கோரிக்கைகள் வருகின்றன. அவர்களின் கருத்துகளுக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன்.  

அவர்களின் உணர்வை மதித்து, கேல் ரத்னா விருது, இனிமேல் மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருது என்று அழைக்கப்படும். ஜெய் ஹிந்த்!" எனப் பதிவிட்டுள்ளார்.

Last Updated : Aug 6, 2021, 1:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details