தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

காங்கிரசுக்கு ஆட்டம் காட்டும் ரெட் டைரி... சூட்சமம் உடைத்த பிரதமர் மோடி! - Rajasthan CM Ashok Gehlot Red Diary

காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர குதாவின் ரெட் டைரி ராஜஸ்தான் சட்டப் பேரவை தேர்தலில் அக்கட்சியின் தேர்தல் வெற்றி திட்டத்தை கவிழ்க்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

Modi
Modi

By

Published : Jul 27, 2023, 4:37 PM IST

சிகார் :ராஜஸ்தானில் மீண்டும் ஆட்சியை பிடிக்க நினைக்கும் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் எதிர்பார்ப்புகளை ரெட் டைரில் அச்சுறுத்துவதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

விரைவில் ராஜஸ்தான் சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து முடிவு பெற்ற உள்ளிட்ட பல்வேறு நலத் திட்ட பணிகளை தொடங்கி வைக்க பிரதமர் மோடி ராஜஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். விழாவில் 1 லட்சத்து 25 ஆயிரம் பிரதான் மந்திரி சம்ரிதி கேந்திரா மையங்களை பிரதமர் மோடி திறந்து வைத்தார். தொடர்ந்து பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் கனவுக் கோட்டையை ரெட்டி டைரி துவம்சம் செய்ய உள்ளதாக தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர குதா வைத்திருக்கும் ரெட் டைரியில் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்டின் சட்டவிரோத பணப் பரிவர்த்தணை அடங்கிய ரகசிய தகவல்கள் உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார். அந்த ரெட் டைரி காங்கிரஸ் கட்சியின் போலியான திட்டங்களின் அடுத்த கட்டம் என்றும், அந்த கட்சியின் கருப்பு பக்கங்கள் அந்த ரெட் டைரியில் அடங்கி இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

ரெட் டைரியில் உள்ள கருப்பு பக்கங்கள் எதிர்வரும் சட்டப் பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு வழிவகுக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். முதலமைச்சர் அசோக் கெலாட் ஆட்சியில் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான வினாத் தாள்கள் வெளியிடப்பட்டது குறித்து விமர்சித்த பிரதமர் மோடி, ராஜஸ்தானில் வினாத் தாள்களை சட்டவிரோதமாக வெளியீடும் நிறுவனம் நடத்தப்பட்டு வருவதாக சாடினார்.

மேலும் இளைஞர்களின் எதிர்கால கனவுகளை காங்கிரஸ் கட்சி முழுமையாக அகற்றி விட்டதாக பிரதமர் மோடி தெரிவித்தார். கிராமங்கள் வளர்ச்சி அடையும் போது மட்டுமே இந்தியா வளர்ச்சியடைய முடியும் என்றும் நகரங்களில் கிடைக்கும் அனைத்து வசதிகளையும் கிராமங்களுக்கும் வழங்க அரசு செயல்பட்டு வருவதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

யூரியா உரம் விலையால் விவசாயிகள் பாதிக்கப்படுவதை தனது அரசு அனுமதிக்காது என்று கூறிய பிரதமர் மோடி இந்தியாவில் உள்ள விவசாயிகளுக்கு யூரியா மூட்டை 266 ரூபாய்க்கு கிடைக்க வழிவகை செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். அதேநேரம் பாகிஸ்தானில் 800 ரூபாய்க்கும், வங்க தேசத்தில் 720 ரூபாய்க்கும், சீனாவில் 2 ஆயிரத்து 100 ரூபாய்க்கும் யூரியா உரம் கிடைப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

ராஜஸ்தானில் 2018ஆம் ஆண்டு பகுஜான் சமாஜ் கட்சி சார்பில் போட்டியிட்ட ராஜேந்திர குதா, பின்னர் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். இதையடுத்து அவருக்கு முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையிலான அமைச்சரவையில் இடம் ஒதுக்கப்பட்டது. இதனிடையே மணிப்பூர் கலவரம் தொடர்பாக ராஜஸ்தான் சட்டப்பேரவையில் நடந்த கூட்டத்தில் பேசிய ராஜேந்திர குதா, ராஜஸ்தானில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றச்சம்பவங்களை தடுப்பதில் மாநில அரசு தோல்வி அடைந்ததாக தெரிவித்தார்.

இதையடுத்து அசோக் கெலாட் அமைச்சரவையில் இருந்து ராஜேந்திர குதா நீக்கப்பட்டார். இந்நிலையில், அமலாக்கத்துறை சோதனையின் போது முதலமைச்சர் அசோக் கெலாட் உள்ளிட்ட முக்கிய பிரமூகர்களின் சட்டவிரோத செயல்பாடுகளின் ஆதாரங்கள் அடங்கிய ரெட் டைரி தன்னிடம் இருப்பதாக ராஜேந்திர குதா அறிவித்தார். விரைவில் ராஜஸ்தான் சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இது மாநில அரசியலில் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க :எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மணிப்பூர் செல்ல திட்டம் - ஜூலை 29, 30 தேதிகளில் பயணம்!

ABOUT THE AUTHOR

...view details