ஐதராபாத் :ஜி20 உச்சி மாநாடு வரும் செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் தலைநகர் டெல்லியில் நடைபெறுகிறது. உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள், பிரதிநிதிகள் இந்த மாநாட்டி கலந்து கொள்கின்றனர். மாநாடு நடைபெறுவதை முன்னிட்டு முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
மாநாடு நடைபெறும் பிரகதி மைதான் முன் 28 டன் எடையிலான ராட்சத நடராஜர் சிலை நிறுவப்பட்டு உள்ளது. மாநாடுக்கு வரும் வெளிநாட்டு பிரதிநிதிகளே கண்டு வியக்கும் வகையில் மாநாட்டுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. தலைநகர் டெல்லியில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன. போக்குவரத்தில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு உள்ளன.
வாசுதேவ குடும்பகம் உணர்த்தும் செய்தி என்ன? :விழாவில் கலந்து கொள்ளும் விருந்தினர்களை வரவேற்க தடபுடல் வரவேற்புகள் தயாராகி வருகின்றன. இந்நிலையில், ஜி20 மாநாடு குறித்து பிரதமர் மோடி கட்டுரை வெளியிட்டு உள்ளார். அதில், "வாசுதேவ குடும்பகம் - இந்த இரண்டு வார்த்தைகள் உள்ளார்ந்த தத்துவங்களை கொண்டதாக காணப்படுகிறது.
உலகம் ஒரே குடும்பம் என்பதை இந்த வாசகம் உணர்த்துகிறது. எல்லைகள், மொழிகள் மற்றும் சித்தாந்தங்களை கடந்து ஒரு உலகளாவிய குடும்பமாக முன்னேற நம்மை ஊக்குவிக்கும் வகையில் உள்ளது. ஒரே பூமியாக, நமது கிரகத்தின் வளர்ச்சிக்காக ஒன்றுபட்டு வருகிறோம். அதேபோல் ஒரு குடும்பமாக அனைத்து தரப்பும் வளர்ச்சியைத் தொடர ஒருவருக்கொருவர் ஆதரவளித்து வருகிறோம்.
எதிர்காலத்தை நோக்கிய இந்தியாவின் பயணம் :நாம் ஒன்றாக இணைந்த எதிர்காலத்தை நோக்கி நகர்கிறோம், ஒரு எதிர்காலம் இது மற்றொன்றோடு இணைக்கப்பட்ட இந்த காலங்களில் மறுக்க முடியாத உண்மையாகும். கரோனாவுக்கு பின் உலகம் அதற்கு முன்பு இருந்ததை விட பன்மடங்கு மாறுபட்டு காணப்படுகிறது. முன்பு இருந்ததை காட்டிலும் ஒப்பிடுகையில் மூன்று முக்கியமான மாற்றங்கள் காணப்படுகின்றனர்.
முதலாவதாக, உலகத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை மையமாகக் கொண்ட பார்வையில் இருந்து விலகி மனிதனை மையமாகக் கொண்ட பார்வைக்கு மாறுவதன் அவசியத்தை உணர்த்துவது அதிகரித்து உள்ளது. இரண்டாவதாக, உலகளாவிய விநியோகச் சங்கிலிகளில் ஏற்பட்டு உள்ள பின்னடைவு மற்றும் நம்பகத்தன்மையின் முக்கியத்துவத்தை உலகம் அங்கீகரித்து உள்ளது.
விளிம்புநிலை நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் இந்தியாவின் முயற்சி :மூன்றாவதாக, உலகளாவிய நிறுவனங்களின் சீர்திருத்தத்தின் மூலம் பன்முகத்தன்மையை உயர்த்துவதற்கான ஒரு கூட்டு அழைப்பு உருவாக் உள்ளது. இந்தியா தலைமையிலான ஜி20 மாநாடு இந்த மூன்று மாற்றங்களை மையமாக கொண்டு இயக்குவதை முன்னிறுத்திச் செல்கின்றன. கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்தோனேஷியாவிடம் இருந்து ஜி20 அமைப்பிற்கான தலைமை பொறுப்பை ஏற்றுக் கொண்ட இந்த மாநாடு முன்னிறுத்தும் போக்கை மாற்ற வேண்டும் என கடிதம் எழுதி இருந்தேன்.
அதுவும் குறிப்பாக வளரும் நாடுகளான தெற்கு மற்றும் ஆபிரிக்கா உள்ளிட்ட விளிம்புநிலை நாடுகளின் கருத்துகளை பிரதிநிதித்துவப்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டதாக குறிப்பிட்டு இருந்தேன். இந்தியாவின் தலைமையில் நடைபெறும் உச்சி மாநாடு 125 நாடுகளின் பங்கேற்பை கொண்ட உலகளாவிய தெற்கின் குரலாக இருக்க வேண்டும்.
இந்தியா முன்னிறுத்து இயற்கையோடு இயந்த வாழ்க்கை :உலகளாவிய உள்ளீடு மற்றும் யோசனைகளை சேகரிப்பது ஒரு முக்கியமான பயிற்சியாகும். மேலும், நமது பிரசிடென்சி ஆபிரிக்க நாடுகளின் மிகப்பெரிய பங்கேற்பைக் கண்டது மட்டுமல்லாமல், ஆபிரிக்க ஒன்றியத்தை G20 அமைப்பின் நிரந்தர உறுப்பினராக சேர்ப்பதற்கும் அழுத்தம் கொடுத்துள்ளது.
இயற்கையோடு இயைந்து வாழ்வதை இந்தியா பழங்காலத்தில் இருந்தே முன்னிறுத்தி வருகிறது. மேலும் தற்போதைய நவீன காலத்தில் காலநிலை ஏற்பட் இந்தியா அதன் பங்களிப்பை அளித்து வருகிறது. உலகளாவிய தெற்கின் பல நாடுகள் வளர்ச்சியின் பல்வேறு கட்டங்களில் உள்ளன மற்றும் காலநிலை நடவடிக்கை ஒரு நிரப்பு நோக்கமாக இருக்க வேண்டும் என்பதையே இந்தியா வலியுறுத்தி வருகிறது.