தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மூன்றாவது முறையாக பிரதமரானால்...! பிரதமர் மோடி கொடுத்த உத்தரவாதம்!

மூன்றாவது முறையாக தான் பிரதமராக பொறுப்பேற்கும் போது, சக்தி வாய்ந்த பொருளாதாரம் கொண்டு நாடுகளில் பட்டியலில் இந்தியாவை முதல் மூன்று இடங்களுக்குள் கொண்டு வருவதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

Modi
Modi

By

Published : Jul 26, 2023, 10:26 PM IST

டெல்லி :தான் மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் போது, இப்போது இருக்கும் வளர்ச்சி விகிதத்தை காட்டிலும் பொருளாதாரத்தில் உலகின் 3வது சக்தி வாய்ந்த நாடாக இந்தியா மாறும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.

ஜி20 மாநாட்டை முன்னிட்டு தலைநகர் டெல்லியில் அமைக்கப்பட்டு உள்ள பன்னோக்கு வசதி கொண்ட சர்வதேச கண்காட்சி மற்றும் மாநாட்டு மையமான பிரகதி மைதான் திறப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது பேசிய பிரதமர் மோடி, அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றும் இலக்கை அடைய வேண்டும் என்று தெரிவித்தார்.

இந்தியாவில் வறுமை என்பது ஒழிக்கப்படும் என்றும் நிதி ஆயோக் வெளியிட்ட அறிக்கையின் படி நாட்டில் 13 கோடியே 50 லட்சம் மக்கள் வறுமையில் இருந்து விடுபட்டு உள்ளதாக பிரதமர் தெரிவித்தார். தனது ஒன்பது ஆண்டு கால ஆட்சியில் விமான நிலையங்களின் எண்ணிக்கை முதல் ரயில்வே இருப்பு பாதை மின்மயமாக்கல் வரை, நகர எரிவாயு விரிவாக்கம் உள்ளிட்ட வளர்ச்சியின் புள்ளி விவரங்களை பிரதமர் மோடி வெளியிட்டார்.

மேலும், கடந்த 2014 ஆம் ஆண்டு பாஜக அரசு பொறுப்பேற்ற போது இந்தியா 10வது பெரிய பொருளாதார நாடாக இருந்ததாக கூறினார். தற்போது சர்வதேச அளவில் இந்தியா 5வது வலிமையான பொருளாதாரம் கொண்ட நாடாக உருப்பெற்று இருப்பதாக தெரிவித்தார். அமெரிக்கா, சீனா, ஜெர்மனி, ஜப்பான் நாடுகளை தொடர்ந்து இந்தியா 5வது வலிமையான பொருளாதாரம் கொண்ட நாடாக உருவாகி இருப்பதாக கூறினார்.

மேலும், தான் மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் போது, இப்போது இருக்கும் வளர்ச்சி விகிதத்தை காட்டிலும் சர்வதேச அளவில் 3வது பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாக இந்தியா மாறும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

முதல் தேசம் முதல் குடிமகன் என்ற கொள்கையை கொண்டு உள்ள இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவோம் என்று பிரதமர் மோடி கூறினார். மேலும் தான் பிரதமராக கடந்த 2014ஆம் ஆண்டு பொறுப்பேற்ற போது உலகளவில் இந்தியா 10 வது பொருளாதார நாடாக இருந்ததாகவும், தற்போது 5வது வலிமையான பொருளாதார நாடாக உருவாகி இருப்பதாகவும் கூறினார்.

மூன்றாவது முறையாக தான் பிரதமராக பொறுப்பேற்கும் போது, சக்தி வாய்ந்த பொருளாதாரம் கொண்டு நாடுகளில் பட்டியலில் இந்தியாவை முதல் மூன்று இடங்களுக்குள் கொண்டு வருவதாகவும் இது தன்னுடைய உத்தரவாதம் என்றும் கூறினார். வரும் செப்டம்பர் மாதம் இந்தியாவின் தலைமையின் கீழ் பாரத மண்டபத்தில் நடைபெறும் ஜி20 மாநாட்டின் கூட்டம், சுற்றுலாவை மேம்படுத்தும் என்று மோடி கூறினார்.

புதிதாக கட்டப்பட்டு உள்ள பாரத மண்டபத்தில் ஜி20 மாநாட்டை நடத்தும் போது, இந்தியாவின் உயரத்தை உலகம் காணும் என்று மோடி தெரிவித்தார். மாநாட்டு மையம் உள்ளிட்ட வளர்ச்சித் திட்டங்களை முடக்க எதிர்மறை சிந்தனை கொண்டவர்கள் முயற்சிப்பதாக பிரதமர் மோடி கூறினார்.

இதையும் படிங்க :நம்பிக்கையில்லா தீர்மானத்தில் உடனடி விவாதம்.. நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்!

ABOUT THE AUTHOR

...view details