மும்பை:மகாராஷ்டிரா மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடி நாசிக் பகுதியின் பஞ்சவடி அருகே கோதாவரி ஆற்றின் கரையில் உள்ள ஸ்ரீகால ராம் மந்திர்-க்கு இன்று (ஜன.12) வருகை தந்தார். முன்னதாக, அயோத்தியில் பத்து நாட்களுக்கு முன்பு நடந்த பவ்யா ராம் மந்திர் 'ப்ரான் ப்ரதிக்ஷா' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டார்.
ஸ்ரீகாலாராம் மந்திரில் பேசிய பிரதமர் மோடி, நாடெங்கும் உள்ள கோயில்களைத் தூய்மையாக வைத்திருக்கப் பக்தர்களும், நாட்டுக் குடிமக்களும் முன்வர வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். அப்போது, மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் அஜித் பவார் ஆகியோர் உடனிருந்தனர்.
நிகழ்ச்சியின் போது, ராமன் பஜனைப் பாடல்களை ஜால்ரா இசைக்கருவியை இசைத்த படியே மோடி பாடியபோது, அங்கிருந்த இசைக்கலைஞர்களின் வாத்தியங்களும் சேர்ந்து ஒலித்தது என அங்கிருந்த அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. மேலும் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த AI மொழிபெயர்ப்பின் மூலம் இந்தி மொழியிலிருந்து மராத்தி மொழியில் கேட்டறிந்தார். அதில், அயோத்திக்கு ராமன் திரும்புவதை விளக்கும் 'யுத் காந்தா' பகுதி வாசிக்கப்பட்டது.
தொடர்ந்து அங்கிருந்த சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாளையொட்டி, நாசிக் பகுதியிலிருந்த அவரது சிலைக்கு அவரது பிரதமர் மோடி மாலை அணிவித்து மரியாதை செய்தார். ராமாயணத்துடன் முக்கிய தொடர்பிலிருந்த பஞ்சவடி பகுதியில் இந்த ஸ்ரீகாலாராம் மந்திர் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.