டெல்லி:1893ஆம் ஆண்டு இதே நாளில் சிக்காகோவில் சுவாமி விவேகானந்தர் தமது தலைசிறந்த உரைகளுள் ஒன்றை வழங்கியதாக பிரதமர் நரேந்தி மோடி கூறியுள்ளார். அவரது உரை, இந்தியாவின் கலாச்சாரம், பண்பாடு குறித்த ஒரு பார்வையை உலக நாடுகளுக்கு எடுத்துரைத்தது என்றும் தெரிவித்தார்.
இதுகுறித்து அவரது ட்விட்டர் பதிவில், “செப்டம்பர் 11ஆம் தேதி, சுவாமி விவேகானந்தருடன் சிறப்பு தொடர்புள்ள தினமாகும். 1893ஆம் ஆண்டு இதே நாளில்தான் சிக்காகோவில் சுவாமி விவேகானந்தர் தமது தலைசிறந்த உரைகளுள் ஒன்றை வழங்கினார். அவரது உரை, இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் பண்பாடு குறித்த ஒரு பார்வையை உலக நாடுகளுக்கு எடுத்துக்காட்டியது.