பிரதமர் நரேந்திர மோடி கதார் நாட்டின் மன்னர், ஷேக் தமிமம் பின் ஹமாத் அல் தானி உடன் தொலைபேசி வாயிலாக உரையாடினார்.
இன்னும் சில நாள்களில் கத்தார் தேசிய தினம் கொண்டாடப்படுகிறது. இதையடுத்து, இந்தியா சர்பில் தனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார். கத்தார் மன்னரும் தீபவளி பண்டிகைக்கான வாழ்த்தை தாமதமாக பகிர்ந்துகொண்டார்.
பின்னர், வர்த்தகம் தொடர்பாக இருவரும் முக்கிய கருத்துகளை பகிர்ந்துகொண்டனர். முதலீடு, எரிசக்தி பாதுகாப்பு போன்ற துறை குறித்து இருவரும் விரிவாக ஆலோசித்தனர்.