டெல்லி: மகாராஷ்ட்ராவைச் சேர்ந்த கல்வியாளரும், சமூக சீர்திருத்தவாதியுமான சாவித்ரிபாய் புலேவின் பிறந்தநாளையொட்டி, அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில், பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டர் பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில், "பலருக்கும் உத்வேகமாக திகழும் சாவித்ரிபாய் புலேவின் பிறந்தநாளில், அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். அவர் பெண்களின் அசைக்க முடியாத சக்தியை வெளிப்படுத்துகிறார். அவருடைய வாழ்க்கை, பெண்களுக்கு கல்வி மற்றும் அதிகாரத்தை அளிப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்டது. சமூக சீர்திருத்தம், சமூக சேவை இரண்டிலும் அவர் கவனம் செலுத்தியது இப்போதும் உத்வேகம் அளிக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.