டெல்லி: மகாகவி சுப்ரமணிய பாரதியின் பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும் வாழ்த்து தெரிவித்தும், புகழாரம் சூட்டியும் வருகின்றனர். அந்த வகையில், பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டர் மூலம் புகழாரம் சூட்டியுள்ளார். இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில், "போற்றுதலுக்குரிய சுப்ரமணிய பாரதியின் பிறந்தநாளன்று அவரை நான் வணங்குகிறேன்.
பாரதியின் கனவுகளை நிறைவேற்ற நாம் பாடுபட்டு வருகிறோம் - பிரதமர் மோடி - PM Modi pays tributes Subramania Bharathi
மகாகவி சுப்ரமணிய பாரதியின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.
PM Modi pays tributes to Subramania Bharathi
அபாரமான துணிச்சல் மற்றும் தலைசிறந்த அறிவு கூர்மையின் எடுத்துக்காட்டாக ‘மகாகவி பாரதியார்' விளங்கினார். இந்தியாவின் முன்னேற்றத்தை குறித்தும், ஒவ்வொரு இந்தியரின் வளர்ச்சி குறித்தும் அவர் மாபெரும் கனவு கண்டார். பல்வேறு துறைகளில் அவரது கனவுகளை நிறைவேற்ற நாம் பாடுபட்டு வருகிறோம்" எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க:பாரதியாருக்கும், புதுச்சேரிக்கும் இடையேயான பந்தம் - கலைமாமணி பட்டாபிராமன் சிறப்பு நேர்காணல்