தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பொக்ரான் சோதனை வெற்றி தினம் - இந்திய விஞ்ஞானிகளுக்கு பிரதமர் நன்றி! - 1998

தேசிய தொழில்நுட்ப தினத்தையொட்டி பொக்ரான் சோதனை குறித்து பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், அடல் பிகாரி வாஜ்பாயையும் நினைவுகூர்ந்துள்ளார்.

PM Modi
PM Modi

By

Published : May 11, 2022, 7:46 PM IST

1998-ம் ஆண்டு குஜராத் மாநிலம் பொக்ரானில் அணுகுண்டு சோதனை நடத்தப்பட்டது. வாஜ்பாய் தலைமையிலான அரசு பதவியேற்ற இரண்டு மாதங்களுக்குள்ளாகவே இந்தச் சோதனை நடத்தப்பட்டது.

இந்தச் சோதனைக்கு உலக நாடுகள் அப்போது கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால், இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியின் குறியீடாகவே நாட்டு மக்கள் இதனைப் பார்த்தனர்.

இதைத்தொடர்ந்து சோதனை நடத்திய மே 11ஆம் தேதி, தேசிய தொழில்நுட்ப தினமாக அறிவிக்கப்பட்டது. ஆண்டுதோறும் மே 11ஆம் தேதி தேசிய தொழில்நுட்ப தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இதையொட்டி பொக்ரான் சோதனை குறித்த வீடியோவை ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, "1998ஆம் ஆண்டு பொக்ரானில் வெற்றிகரமாக அணு ஆயுத சோதனைகளை நடத்திய இந்திய விஞ்ஞானிகளுக்கும், அவர்களின் முயற்சிகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

சிறந்த அரசியல் திறனையும், துணிச்சலையும் வெளிப்படுத்திய அடல் பிகாரி வாஜ்பாயின் தலைமைப் பண்பை இந்த நேரத்தில் பெருமையுடன் நினைவுகூர்கிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: காஷ்மீரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

ABOUT THE AUTHOR

...view details