டெல்லி : சியாமா பிரசாத் முகர்ஜியின் 120ஆவது பிறந்த தினம் இன்று (ஜூலை 6) கொண்டாடப்படுகிறது. இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி அவரின் திருவுருவ படத்துக்கு மரியாதை செலுத்தினார்.
இதைத்தொடர்ந்து ட்விட்டரில் அவர் விடுத்துள்ள செய்தியில் “டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி பிறந்ததினத்தில் அவருக்கு தலை வணங்குகிறேன். அவரது உயர்ந்த லட்சியங்கள் நாடு முழுக்க மில்லியன் கணக்கானவர்களை ஊக்குவிக்கின்றன. டாக்டர் முகர்ஜி தனது வாழ்க்கையை நாட்டின் ஒற்றுமை, முன்னேற்றத்திற்காக அர்ப்பணித்தார். அவர் ஒரு பேரறிஞர், கல்வியாளர்” எனக் கூறியுள்ளார்.