டெல்லி:சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125ஆவது பிறந்தநாள் இன்று(ஜன.23) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி நேதாஜி சிலைக்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.
இது குறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டரில், "நாட்டு மக்கள் அனைவருக்கும் பராக்கிரம் திவாஸ் வாழ்த்துக்கள் (Parakram Diwas).
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் ஜெயந்தி இன்று, இந்நாளில் அவருக்கு தலை வணங்குகிறேன். நமது தேசத்திற்கு அவர் ஆற்றிய மகத்தான பங்களிப்பிற்காக ஒவ்வொரு இந்தியனும் பெருமைகொள்கிறான்" என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக கடந்த ஆண்டு ஒன்றிய அரசு நேதாஜியின் 125ஆவது பிறந்த நாளை வெகு விமரிசையாக கொண்டாடும் வகையில், ஜனவரி 23ஆம் தேதியை 'பராக்ரம் திவாஸ்' அதாவது 'பராக்கிரம தினம்' என அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
கிரானைட் சிலை
பிரதமர் மோடி கடந்த ஜன.21ஆம் தேதி நேதாஜியை கௌரவிக்கும் வகையில், டெல்லியில் உள்ள இந்தியா கேட் பகுதியில் கிரானைட்டால் செய்யப்பட்ட பிரமாண்ட சிலை நிறுவப்படும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.