டெல்லி:மகாத்மா காந்தியின் 154வது பிறந்த் நாளை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
தேசத் தந்தை மகாத்மா காந்தி, தற்போது குஜராத்தின் ஒரு பகுதியாக இருக்கும் போர்பந்தரில் 1869ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி பிறந்தார். இந்த ஆண்டு அவரது 154வது ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் சுதந்திர இயக்கத்திற்கும், வாழ்க்கைக்கான தத்துவங்களுக்கும் மகத்தான பங்களிப்பைச் செய்த, மகாத்மா காந்தியை நினைவுகூரும் வகையில், இன்று (அக். 2) அவரது காந்தி ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.
அதன்படி காந்தியின் 154 வது பிறந்த நாளை முன்னிட்டு டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவரை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார். மேலும் துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோரும் மகாத்மா காந்தி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
காந்தி ஜெயந்தி குறித்து குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வெளியிட்டுள்ள குறிப்பில், "மார்டின் லூதர் கிங் ஜூனியர், நெல்சன் மண்டேலா, பராக் ஒபாமா போன்ற பல உலகத் தலைவர்கள் காந்தியின் சிந்தனைகளால் ஊக்கம் பெற்றுள்ளனர். அவரது துடிப்பு மிக்க வலிமையான எண்ணங்கள் எப்போதும் உலகிற்கு நெருக்கமான ஒன்றாக இருக்கும்.