தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

முன்னாள் பிரதமர் நேருவுக்கு ட்விட்டரில் அஞ்சலி செலுத்திய மோடி! - பிரதமர் மோடி ஜவஹர்லால் நேருக்கு மரியாதை

டெல்லி: ஜவஹர்லால் நேருவின் 131ஆவது பிறந்தநாளான இன்று பிரதமர் மோடி, நேருவுக்கு ட்விட்டரில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

PM Modi pays tribute to Jawaharlal Nehru
PM Modi pays tribute to Jawaharlal Nehru

By

Published : Nov 14, 2020, 10:46 AM IST

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாள் இன்று (நவ.14) கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், ”நாட்டின் முதல் பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஜவஹர்லால் நேரு, 1889 ஆம் ஆண்டு நவம்பர் 14ஆம் தேதி உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் பிறந்தார். நாட்டின் சுதந்திர போராட்டத்தில் பெரும்பங்கு வகித்த இவர், சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக ஆகஸ்ட் 15ஆம் தேதி 1947ஆம் ஆண்டு பதவியேற்றார். 1964ஆம் ஆண்டு மே மாதம் 27ஆம் தேதி நேரு காலமானார்.

'நேரு மாமா' என குழந்தைகளால் அழைக்கப்பட்ட இவரது பிறந்த தினம் குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:இந்திய எல்லைப்பகுதியில் ஜவான்கள் தீபாவளி கொண்டாட்டம்!

ABOUT THE AUTHOR

...view details