கடந்த 1630ஆம் ஆண்டு புனேவின் சிவ்னேரி கோட்டையில் பிறந்த சத்ரபதி சிவாஜி, இந்திய வரலாற்றின் மிகச் சிறந்த மாமன்னர்களில் ஒருவராக திகழ்நதார். அவரின் பிறந்த நாளை முன்னிட்டு, மும்பையில் உள்ள அவரது சிலைக்கு மகாராஷ்டிரா மாநில ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி மரியாதை செலுத்தினார்.
சத்ரபதி சிவாஜிக்கு மரியாதை செலுத்திய பிரதமர் மோடி! - சத்ரபதி சிவாஜி
டெல்லி: மராட்டிய மாமன்னர் சத்ரபதி சிவாஜியின் பிறந்தநாளை முன்னிட்டு, அவருக்கு மரியாதை செலுத்திய பிரதமர் மோடி, அவரின் வாழ்க்கை காலம் கடந்து நாட்டு மக்களை உத்வேகப்படுத்தும் என தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி
இந்நிலையில், பிரதமர் மோடி ட்விட்டர் பக்கத்தில், "இந்திய தாயின் மிகச் சிறந்த புதல்வர்களில் ஒருவருக்கு தலைவணங்குகிறேன். துணிவு, இரக்க குணம், நல்லாட்சி ஆகியவற்றின் உருவகமாக திகழும் அவரின் அறிவாற்றல் நாட்டு மக்களை காலம் கடந்தும் உத்வேகப்படுத்தும்" என பதிவிட்டுள்ளார்.