டெல்லி: மகாத்மா காந்தியின் நினைவு நாளைக் குறிக்கும் விதமாகவும், நாட்டின் சுதந்திரத்திற்காக அவர் ஆற்றிய பங்களிப்பை கௌரவிக்கும் வகையிலும் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 30 அன்று தியாகிகள் தினமாக இந்தியாவில் அனுசரிக்கப்படுகிறது.
ஜனவரி 30, 1948 அன்று, பிர்லா இல்லத்தில் உள்ள காந்தி ஸ்மிருதியில் மகாத்மா காந்தி நாதுராம் கோட்சேவால் படுகொலை செய்யப்பட்டார். மத்திய அரசின் உத்தரவுப்படி, ஜனவரி 30ஆம் தேதி அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்படுகிறது.
பிரதமர் மோடி மரியாதை
இந்நிலையில், மகாத்மா காந்தியின் 75ஆவது நினைவு நாளான இன்று (ஜன. 30) பல்வேறு தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், டெல்லி ராஜ்காட்டிலுள்ள காந்தியின் நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “பாபுவின் (மகாத்மா காந்தி) நினைவு நாளில், அவரை நினைவு கூர்கிறேன். அவரது உன்னத கொள்கைகளை மேலும் பிரபலப்படுத்துவது நமது கூட்டு முயற்சியாகும்.