டெல்லி:இமாச்சலப் பிரதேசத்தைப் பூர்விகமாகக் கொண்ட ஜெகத் பிரகாஷ் நட்டா எனப்படும் ஜெ.பி. நட்டா பிகாரில் 1960ஆம் ஆண்டு பிறந்தார். இவர் ஆர்எஸ்எஸ் அமைப்பில் மாணவ பருத்துவத்திலிருந்தே துடிப்புடன் செயல்பட்டு, பாஜகவின் மாணவர் அணியில் தன்னை இணைத்துக் கொண்டு செயல்பட்டார்.
பின்னர் பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாவில் இணைந்து அரசியல் பயணத்தைத் தொடர்ந்தார். இவர் மத்திய சுகாதாரத் துறை அமைச்சராகவும், பாஜகவின் ஆட்சிமன்றக் குழுச் செயலாளராகவும் பதவி வகித்தவர். கடந்த ஆண்டு ஜூலை மாதம் பாஜகவின் தேசியத் தலைவராக ஒருமனதாகத் தேர்வுசெய்யப்பட்டார். இவர் இமாச்சலப் பிரதேசத்திலிருந்து நாடாளுமன்றத்திற்குத் தேர்வுசெய்யப்பட்டார்.
இந்நிலையில், இன்று அவர் தனது 60ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவருக்குப் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பல தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.