தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

வங்கிகள் ஏழைகளின் வீட்டு வாசலில் செல்லும் சூழ்நிலை மிகப்பெரிய மாற்றமாகும் - பிரதமர் மோடி

நாடு முழுவதும் 75 மாவடங்களில் 75 டிஜிட்டல் வங்கி அலகுகளை தொடங்கிவைத்த பிரதமர் மோடி வங்கிகள் ஏழைகளின் வீட்டு வாசலில் செல்லும் சூழ்நிலை மிகப்பெரிய மாற்றமாகும் என்று தெரிவித்தார்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

By

Published : Oct 17, 2022, 7:34 AM IST

டெல்லி:பிரதமர் நரேந்திர மோடி, 75 மாவட்டங்களில் உள்ள 75 டிஜிட்டல் வங்கி அலகுகளை காணொலி மூலம் நாட்டுக்கு நேற்று (அக். 16) அர்ப்பணித்தார். அதன்பின் உரையாற்றிய பிரதமர், வங்கி சேவைகள் கடைசி மைல் வரை சென்றடைவதை உறுதி செய்வதற்கு நாங்கள் முதன்மையான முன்னுரிமை அளித்துள்ளோம். இந்த 75 டிஜிட்டல் வங்கி அலகுகளை மூலம் எந்த நேரடி ஆவணங்களும் இல்லாமல், டிஜிட்டல் முறையில் மக்கள் பயன்படுத்தாலாம். குறைந்தபட்ச உள்கட்டமைப்புடன் கூடிய அதிகபட்ச சேவைகளை மக்களுக்கு வழங்கும். சிறிய நகரங்கள் மற்றும் கிராமங்களில் வசிக்கும் மக்கள் கடன்களைப் பெறுவதற்கு பணத்தை மாற்றுவது போன்ற பலன்களைப் பெறுவார்கள்.

இது ஏழைகளுக்கும் வங்கிகளுக்கும் இடையிலான தூரத்தைக் குறைத்தது மிகப்பெரிய மாற்றமாகும். இன்று இந்தியாவில் 99 சதவீதத்திற்கும் அதிகமான கிராமங்களில் 5 கிமீ சுற்றளவில் வங்கிக் கிளைகள் அல்லது அது சார்ந்த சேவைகள் வழங்கப்படுகின்றன. இந்தியாவில் உள்ள வங்கி கிளைகளின் எண்ணிக்கை ஜெர்மனி, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளை விட அதிகமாக உள்ளது. இன்று 70 கோடி உள்நாட்டு ரூபே கார்டுகள் செயல்பாட்டில் உள்ளன.

தொழில்நுட்பம் மற்றும் பொருளாதாரத்தின் இந்த கலவையானது ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் கண்ணியத்தை மேம்படுத்துகிறது. அதே நேரத்தில் இது நாட்டின் டிஜிட்டல் பிளவுகளையும் நீக்குகிறது. எந்தவொரு நாட்டின் பொருளாதாரமும் அதன் வங்கி அமைப்பு வலுவாக இருப்பதைப் பொறுத்தே முன்னேறுகிறது. இந்த முன்முயற்சி நமது வங்கி முறை மற்றும் பொருளாதாரத்தை எதிர்காலத்திற்கு தயாராக இருக்கும் ஒரு கட்டத்திற்கு கொண்டு செல்லும் என்று நான் உறுதியாக நம்புகிறேன், மேலும் உலகப் பொருளாதாரத்தை வழிநடத்தும் திறனைக் கொண்டிருக்கும் என்பதை உறுதியாக தெரிவிக்கிறேன் எனத் தெரிவித்தார்.

டிஜிட்டல் வங்கி அலகுகள்:2022-23ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் உரையில், நாட்டின் 75 ஆண்டு சுதந்திரத்தை நினைவுகூரும் வகையில் 75 மாவட்டங்களில் 75 டிஜிட்டல் வங்கி அலகுகளை அமைப்பதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். அந்த வகையில் டிஜிட்டல் வங்கியின் பலன்கள் நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கையும் சென்றடைவதை உறுதி செய்யும் நோக்கத்துடன் இவை அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அமைக்கப்பட்டன. 11 பொதுத்துறை வங்கிகள், 12 தனியார் துறை வங்கிகள் மற்றும் ஒரு சிறு நிதி வங்கி ஆகியவை இந்த முயற்சியில் பங்கேற்றுள்ளன.

சேமிப்பு கணக்குகளை தொடங்குவது, வங்கி கணக்கில் இருப்பை சரிபார்ப்பது, பாஸ்புக்கில் பதிவு செய்வது, நிதி மாற்றம், வைப்பு தொகை முதலீடு, கடன் விண்ணப்பங்கள், காசோலைகளுக்கு பணம் செலுத்துவதை நிறுத்தி வைப்பதற்கான அறிவுறுத்தல்கள், கிரெடிட் மற்றும் டெபிட் அட்டைகளுக்கு விண்ணப்பித்தல், வங்கி கணக்கு விவரத்தை காணுதல், வரி, கட்டணங்கள் செலுத்துதல், வாரிசுதாரர் நியமனம் போன்ற பல்வேறு டிஜிட்டல் வங்கி வசதிகளை மக்களுக்கு வழங்கும் நிலையங்களாக இந்த அலகுகள் செயல்படும்.

வங்கிகளின் திட்டங்கள் மற்றும் சேவைகளை ஆண்டு முழுவதும் குறைந்த செலவில் வசதியான அணுகுமுறையுடன் வாடிக்கையாளர்களுக்கு இவை வழங்கும். டிஜிட்டல் வங்கி அனுபவத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதுடன், டிஜிட்டல் நிதி அறிவை பரப்பி இணையவெளி பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை வாடிக்கையாளர்களிடம் ஏற்படுத்தி பாதுகாக்கும். டிஜிட்டல் வங்கி அலகுகள் வழங்கும் சேவைகள் மற்றும் வர்த்தகத்தில் வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் குறைபாடுகளுக்கு நிகழ் நேர உதவி வழங்க போதுமான டிஜிட்டல் ஏற்பாடுகளும் செய்யப்படும்.

இதையும் படிங்க:மதுபானக் கொள்கை ஊழல் - மணீஷ் சிசோடியாவிடம் நாளை சிபிஐ விசாரணை

ABOUT THE AUTHOR

...view details