தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கேதார்நாத் கோயிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் - Kedarnath temple

உலக புகழ் பெற்ற கேதார்நாத் கோயிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்தார்.

கேதார்நாத் கோயிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம்
கேதார்நாத் கோயிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம்

By

Published : Oct 21, 2022, 10:16 AM IST

டேராடூன்: பிரதமர் நரேந்திர மோடி உத்தரகாண்ட் மாநிலத்திற்கு இரண்டு நாள் சுற்றுப் பயணமாக சென்றுள்ளார். இதனை முன்னிட்டு இன்று (அக் 21) காலை டேராடூனில் உள்ள ஜாலி கிராண்ட் விமான நிலையத்திற்கு வந்தடைந்த பிரதமர் மோடியை, லெட்டினண்ட் ஜெனரல் குர்மீத் சிங், அம்மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி மற்றும் மத்திய அமைச்சர் அஜய் பட் ஆகியோர் வரவேற்றனர்.

தொடர்ந்து ருத்ரபிரயாக் மாவட்டத்தில் உள்ள உலக புகழ் பெற்ற கேதார்நாத் கோயிலுக்கு சென்ற பிரதமர் மோடி அங்கு சாமி தரிசனம் செய்தார். மலைவாழ் மக்களின் வெள்ளை நிற பாரம்பரிய உடையில் சென்று, அங்குள்ள ஆதி குரு சங்கராச்சாரியாரின் சமாதி கோயிலுக்கும் சென்று வழிபட்டார். பின்னர் இங்கிருந்து அருகிலுள்ள பத்ரிநாத் கோயிலுக்குச் செல்ல உள்ளார்.

தொடர்ந்து 9.7 கிலோமீட்டர் நீளமுள்ள கெளரிகுண்ட் - கேதார்நாத் ரோப்வே திட்டத்திற்கு மோடி அடிக்கல் நாட்டுகிறார். மேலும் அரைவல் பிளாசா மற்றும் அப்பகுதியில் உள்ள ஏரிகளை அழகுபடுத்தும் திட்டங்கள் உள்பட பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பார்வையிடுகிறார். தொடர்ந்து மானா கிராமத்தில் நடைபெறும் ஒரு கூட்டத்தில் பிரதமர் உரையாற்றுகிறார்.

இதையும் படிங்க:அன்டோனியோ குட்ரெஸூக்கு இந்தியா 2ஆவது வீடு போன்றது - பிரதமர் மோடி

ABOUT THE AUTHOR

...view details