டெல்லி:இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "கிருஷ்ணா ஒரு பழம்பெரும் நடிகராக திகழ்ந்தார். அவர் தனது பன்முக நடிப்பு மற்றும் கலகலப்பான ஆளுமை மூலம் மக்களின் இதயங்களை வென்றார். அவரது மறைவு சினிமா மற்றும் பொழுதுபோக்கு உலகிற்கு மிகப்பெரிய இழப்பாகும்.
கிருஷ்ணாவின் மறைவு பொழுதுபோக்கு உலகிற்கு மிகப்பெரிய இழப்பாகும் - பிரதமர் மோடி - Telugu film actor Krishna demise
தெலுங்கு நடிகர் கிருஷ்ணாவின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

PM Modi mourns death of Telugu actor Krishna
இந்த சோகமான நேரத்தில் எனது எண்ணங்கள் அவரது மகன் மகேஷ் பாபு மற்றும் அவரது குடும்பத்தினருடனும் உள்ளன. ஓம் சாந்தி எனத் தெலுங்கு மொழியில் பதிவிட்டுள்ளார். தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவின் தந்தையும் பழம்பெரும் நடிகருமான கிருஷ்ணா இன்று (நவ. 15) காலை ஹைதரபாத்தில் உயிரிழந்தார். உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். அவருக்கு வயது 80 வயதாகும்.
இதையும் படிங்க:தெலுங்கு நடிகர் கிருஷ்ணா மறைவு; ஸ்டாலின், ரஜினி கமல் இரங்கல்..