ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த மாதம் 23ஆம் தேதி, தொடங்கிய 32ஆவது ஒலிம்பிக் ஆகஸ்ட் 8ஆம் தேதி கண்கவர் வாணவேடிக்கைகளுடன் நிறைவுபெற்றன.
206 நாடுகளிலிருந்து 11ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றனர்.
இதில் இந்தியா ஒரு தங்கம், இரண்டு வெள்ளி, நான்கு வெண்கலம் என ஏழு பதக்கங்களை வென்று, உலகளவில் பதக்கப்பட்டியலில் 48ஆவது இடத்தைப் பிடித்தது.
குறிப்பாக இந்த ஒலிம்பிக்கில் இந்தியா சிறப்பான சாதனைகளைப் படைத்துள்ளது. தடகளப்போட்டியில் 120 ஆண்டுகளுக்குப்பின், ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார். 41 ஆண்டுகளுக்குப் பின் ஆடவர் ஹாக்கி அணி போட்டியில் வென்று வெண்கலப் பதக்கத்தைப் பெற்றது.
வீரர்களுக்கு வரவேற்பு
39 தங்கம், 41 வெள்ளி, 33 வெண்கலம் என 113 பதக்கங்களுடன் அமெரிக்கா முதலிடத்தைப் பிடித்தது. 88 பதக்கங்களுடன் சீனா இரண்டாவது இடத்தையும், ஒலிம்பிக் போட்டிகளை நடத்திய ஜப்பான் முறையே மூன்றாவது இடத்தைப் பிடித்தது.
ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடைந்து நாடு திரும்பிய வீரர்களுக்கு அவர்களது ஊர்களில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.