தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

முப்படை தலைமைகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை

முப்படைகளில் தலைமை அதிகாரிகளும், பாதுகாப்பு சார்ந்த மூத்த அதிகாரிகளும் பிரதமர் மோடியைச் சந்தித்து, அவர்கள் உள்நாட்டிலும், எல்லையிலும் பாதுகாப்பு குறித்து அவரிடம் விளக்கியுள்ளனர்.

Modi met three services chiefs
Modi met three services chiefs

By

Published : Mar 14, 2022, 10:31 AM IST

டெல்லி: நாட்டின் பாதுகாப்பு தாயர் நிலை குறித்தும், நடப்பு உலகலாவிய சூழல் (ரஷ்ய - உக்ரைன் விவகாரம்) குறித்தும் விவாதிக்க, உயர்மட்ட கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நேற்று (மார்ச் 13) கூடியது. இந்த கூட்டத்தை தொடர்ந்து, முப்படைகளில் தலைமை அதிகாரிகளும், பாதுகாப்பு சார்ந்த மூத்த அதிகாரிகளும் பிரதமர் மோடியைச் சந்தித்துள்ளனர். அவர்கள் உள்நாட்டிலும், எல்லையிலும் நிகழும் பாதுகாப்பு நிலவரம் குறித்து பிரதமரிடம் விளக்கியுள்ளனர்.

உயர் கூட்டத்தில், இந்தியாவின் எல்லைகளில் (கடல் எல்லை, வான்வெளி எல்லை) மேற்கொள்ளப்பட்டுள்ள சமீபத்திய மாற்றங்கள் மற்றும் இந்தியாவின் பாதுகாப்புத் தயார்நிலை குறித்தும் பிரதமர் விளக்கியுள்ளார்.

மேலும், உக்ரைனின் போர் தாக்குதலில் சிக்கி உயிரிழந்த கர்நாடக மாணவர் நவீன் சேகரப்பாவின் உடலை மீட்புதற்கு அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும் எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இக்கூட்டத்தில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு அலோசகர் அஜித் தோவல் மற்றும் மூத்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: 'சோனியா, ராகுல், பிரியங்கா அனைவரும் ராஜினாமா செய்யத் தயார். ஆனால்...' - காங்கிரஸ் கூட்டத்தில் நடந்தது என்ன?

ABOUT THE AUTHOR

...view details