குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை, பிரதமர் நரேந்திர மோடி குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று (ஜூலை 15) சந்தித்தார்.
இந்தச் சந்திப்பின்போது முக்கிய விவகாரங்கள் குறித்து இருவரும் பேசியதாக குடியரசுத் தலைவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ஜூலை 19ஆம் தேதி நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெறவுள்ள நிலையில், இந்தச் சந்திப்பானது நடைபெற்றுள்ளது.
முன்னதாக, நேற்று தனது சொந்த தொகுதியான வாரணாசி சென்ற பிரதமர் மோடி அங்கு ரூ.1,500 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கிவைத்தார்.
மேலும், வேளாண்துறை கட்டமைப்பை நவீனப்படுத்த ஒரு லட்சம் கோடி ரூபாய் சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
நாட்டின் கரோனா நிலவரம் குறித்து தமிழ்நாடு உள்ளிட்ட ஆறு மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று (ஜூலை 16) ஆலோசனை நடத்துகிறார்.
இதையும் படிங்க:மிஸ் பண்ணாதீங்க: குஜராத்தில் பிரமாண்ட பூங்கா, அதிசயங்கள் நிறைந்த அரங்கம்...