டெல்லி :பிரதமர் மோடியின் மாதாந்திர வானொலி உரையான மன் கி பாத் நிகழ்ச்சியின் 100வது எபிசோட் இன்று ஒலிபரப்பப்பட உள்ளது. உலகின் முழுவதும் ஒலிபரப்படும் இந்த நிகழ்ச்சியை லட்சக்கணக்கான மக்கள் கேட்க உள்ளனர். அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகளின் தலைமையகத்தில் மன் கி பாத் நிகழ்ச்சியின் 100வது எபிசோட் நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது.
பிரதமர் மோடி கடந்த 2014 ஆம் ஆண்டு பிரதமராக பதவியேற்றதும் முதல் முறையாக அக்டோபர் 3 ஆம் தேதி மன் கி பாத் என்ற நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. அதன்பின், மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு 2 வது முறையாக பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பின்னரும் இந்த நடைமுறை தொடர்ந்து வருகிறது. இந்நிகழ்ச்சியில் சமூக மற்றும் மக்கள் நலன் சார்ந்த பல்வேறு விவகாரங்கள் குறித்து பிரதமர் மோடி பேசி வருகிறார். பிரதமர் மோடியின் 100 வது மன் கி பாத் நிகழ்ச்சி இன்று ஒலிபரப்பு செய்யப்பட உள்ளது.
நிகழ்ச்சியை இந்தியா மட்டுமின்றி, உலகம் முழுவதும் ஒலிபரப்ப முழு அளவில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் 22 இந்திய மொழிகளில் பிரதமர் மோடியின் மன் கி பாத் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்திய மொழிகள் தவிர்த்து 29 கிளை மொழிகளிலும் இந்த நிகழ்ச்சி ஒலிபரப்பப்பட்டு வருகிறது.
பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சி 100வது எபிசோட் என்ற மைல்கல்லை எட்டியதை அடுத்து அமெரிக்கா, நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் நேரலை செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. அமெரிக்க நேரப்படி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1:30 மணிக்கு இந்த உரை ஒலிபரப்பாகும் என்றும் ஐநாவின் அறங்காவலர் கவுன்சில் சேம்பரில் உரை ஒலிபரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.