பிரதமர் நரேந்திர மோடி இம்மாத இறுதியில் அமெரிக்கா செல்லவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் பயணம் தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியாகவில்லை. ஆனால், ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்தின் தகவலின்படி, பிரதமரின் அமெரிக்கப் பயண ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும், அட்டவணை இன்னும் இறுதிசெய்யப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்காலிகத் திட்டத்தின்படி, நரேந்திர மோடி வரும் 23, 24 ஆகிய தேதிகளில் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். அமெரிக்காவின் அதிபராக ஜோ பைடன் பொறுப்பேற்ற பிறகு, அந்நாட்டுக்கு மோடி நேரடியாகச் சென்று முதன்முறையாக பைடனை நேரில் சந்திக்கிறார்.
இதற்கு முன்னதாக, இருவரும் குவாட் உச்சி மாநாடு, ஜி7 மாநாடு உள்ளிட்ட பல நிகழ்வுகளில் காணொலி வாயிலாக சந்தித்துப் பேசியுள்ளனர்.