நாட்டின் பொருளாதார, உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவற்றை கருத்தில் கொண்டு ரூ.100 லட்சம் கோடி மதிப்பிலான அதிவிரைவுத் திட்டத்தை(GatiShakti) பிரதமர் நரேந்திர மோடி இன்று(அக்.13) டெல்லியில் தொடங்கி வைத்தார். அத்துடன் பிரகதி மைதானத்தில் புதிய கண்காட்சி வளாகத்தையும் அவர் தொடங்கி வைத்தார்.
இந்த விழாவில் ஒன்றிய அமைச்சர்கள் நிதின் கட்கரி, பியூஷ் கோயல், ஹர்தீப் சிங் பூரி, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு மாநில முதலமைச்சர்கள், துணை நிலை ஆளுநர்கள், பிரபல தொழிலதிபர்கள் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, "தற்சார்பு இந்தியா தீர்மானத்துடன் அடுத்த 25 ஆண்டுகளுக்கான இந்தியாவின் அடித்தளம் இன்று அமைக்கப்படுகிறது. பிரதமரின் அதிவிரைவு தேசிய பெருந்திட்டம், தற்சார்பு இந்தியா வாக்குறுதிக்கான இந்தியாவின் நம்பிக்கையை பெறும். இந்தப் பெருந்திட்டம் 21ஆம் இந்தியாவின் நூற்றாண்டுக்கு அதிவிரைவு சக்தியை அளிக்கும்.