பாஜக மூத்தத் தலைவர் அத்வானி இன்று தனது 93ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, பிரகாஷ் ஜவடேகர் உட்பட பல கட்சி நிர்வாகிகள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்
கோடிக்கணக்கான பாஜகவினருக்கு அத்வானி வாழும் உத்வேகமாகத் திகழ்கிறார் - பிரதமர் மோடி புகழாரம்! - modi lauds advani
டெல்லி: கோடிக்கணக்கான பாஜக தொண்டர்கள் மட்டுமின்றி நாட்டு மக்களுக்கும் அத்வானி வாழும் உத்வேகமாக இருக்கிறார் என பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், 'அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான அரசாங்கத்தில் உள்துறை அமைச்சராகவும், துணைப் பிரதமராக இருந்த அத்வானி, நாட்டின் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கினார். மேலும் கட்சியை மக்களிடம் கொண்டு சென்றார். கோடிக்கணக்கான பாஜக தொண்டர்கள் மட்டுமின்றி நாட்டு மக்களுக்கும் அத்வானி வாழும் உத்வேகமாக இருக்கிறார். அவர் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ வேண்டும் எனப் பிரார்த்தனை செய்கிறேன்' எனக் குறிப்பிட்டிருந்தார்.
பாஜகவின் மிக நீண்டகாலத் தலைவராக இருந்த எல்.கே.அத்வானி, கட்சியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றதில் மிகமுக்கியப் பங்காற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.