டெல்லி:உலக பருவநிலை உச்சி மாநாட்டில் பங்கேற்ற இந்திய பிரதமர் நரேந்திர மோடி பயணம் முடிந்து இன்று நாடு திரும்பியுள்ளார்.
ஐ.நாவின் COP28 மாநாட்டின் ஒரு பகுதியாக நடைபெற்ற உலக பருவநிலை உச்சி மாநாடு துபாயில் நேற்று முந்தினம் தொடங்கியது. இந்த மாநாட்டில் இந்தியா, அமெரிகா, சீனா, உள்ளிட்ட 180 நாடுகள் பங்கேற்றன. மேலும் இந்த மாநாட்டில் சுற்றுச்சூழல் தொண்டு நிறுவனங்கள், தொழில் நிறுவனப் பிரதிநிதிகள், மாணவப் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: துபாயில் நடைபெறும் காலநிலை மாற்றம் மாநாடு… இன்று பிரதமர் மோடி பங்கேற்பு!
COP28 உச்சி மாநாடானது நவம்பர் 28 முதல் டிசம்பர் 12 வரை துபாயில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் பின் டிசம்பர் 1 அன்று ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானை சந்தித்தார். COP28 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக நாடத்தியதை பாராட்டி அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.
மேலும் இந்த COP28 மாநாட்டில் பசுமை காலநிலை திட்டம் (GCP) குறித்த உயர்மட்ட நிகழ்வை இணைந்து நடத்தியதற்காக அவர் நன்றி தெரிவித்தார். 2028 ல் நடைபெற உள்ள 33 ஆவது மாநாட்டை இந்தியா எடுத்து நடத்த ஆவலாக உள்ளதாகவும் அவர் கூறியிருந்தார். இந்நிலையில் மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் பயணத்தை முடித்து இன்று டெல்லி திரும்பினார்.
இதையும் படிங்க: உத்தரகாசி சுரங்க விபத்து; மீட்கப்பட்ட தொழிலாளர்களுடன் தொலைபேசியில் அழைத்து நலம் விசாரித்த பிரதமர்!