தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பிரதமர் நரேந்திர மோடி மாபெரும் ஜனநாயகத் தலைவர்- அமித் ஷா - PM Modi

பிரதமர் நரேந்திர மோடி மாபெரும் ஜனநாயகத் தலைவர் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.

Amit Shah
Amit Shah

By

Published : Oct 10, 2021, 2:36 PM IST

டெல்லி : உள்துறை அமைச்சர் அமித் ஷா, சன்சாத் தொலைக்காட்சிக்கு நேர்காணல் அளித்தார். அப்போது அமித் ஷா, “பிரதமர் நரேந்திர மோடி மிகுந்த ஜனநாயக பண்புகளை கொண்ட தலைவர்; அவரைப் போன்று ஆழ்ந்து கேட்பவரை நான் பார்த்ததில்லை” என்றார்.

அந்த நேர்காணலில் அமித் ஷா மேலும் கூறுகையில், “அரசாங்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி உடன் இணைந்து பணியாற்ற எனக்கு வாய்ப்பு கிடைத்தது.

பிரதமர் நரேந்திர மோடி அமைச்சரவையை மிகவும் ஜனநாயக முறையில் நடத்துகிறார். அவர் அயராது கேட்பார், அளவோடு பேசுவார், சரியான முடிவை எடுப்பார்.

மூன்று கட்டங்களாக பிரிக்கலாம்

பிரதமர் நரேந்திர மோடியின் பொது வாழ்க்கையை மூன்று கட்டங்களாகப் பிரிக்கலாம். முதல் கட்டத்தில், கட்சி அமைப்பை சீரமைக்கும் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டது. இரண்டாவது கட்டமாக அவர் குஜராத்தின் முதலமைச்சராக பணியாற்றினார். மூன்றாவது, அவர் பிரதமராக பொறுப்பேற்றபோது நடந்தது. இந்த மூன்று கட்டங்களும் மிகவும் சவாலானவை.

கட்சி அமைப்பை சீரமைக்கும் பொறுப்பை பிரதமர் நரேந்திர மோடி வெற்றிகரமாக நிறைவேற்றினார். முதலமைச்சரானதும், நிர்வாகத்தின் நுணுக்கங்களை மிகுந்த பொறுமையுடன் புரிந்து கொண்டு அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்வதில் வெற்றி பெற்றார்.

பழங்குடி மக்களுக்கு திட்டங்கள்

குஜராத்தில் அடுத்தடுத்த அரசாங்கங்களால் பழங்குடியின மக்கள் புறக்கணிக்கப்பட்டனர். காங்கிரஸ் அவர்களை வாக்கு வங்கியாகப் பயன்படுத்தியது.

ஆனால் வளர்ச்சி அவர்களை அடையவில்லை. இந்நிலையில், முதல் முறையாக, 2003ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் (பட்ஜெட்), நரேந்திர மோடி பழங்குடியினர் நல்வாழ்வுக்கான திட்டங்களை அறிமுகப்படுத்தினார். பழங்குடியினருக்கு அரசியலமைப்பின் படி உரிமைகள் வழங்கப்பட்டன.

கடின முடிவுகள்

காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி (UPA) அரசாங்கத்தின் கீழ், நாடு அனைத்து முக்கியப் பகுதிகளிலும் வளர்ச்சியின்றி குன்றி காணப்பட்டது. வெளிநாடுகள் போதிய மரியாதை அளிக்கவில்லை. உள்நாட்டு சச்சரவு என பல பிரச்சினைகள் தென்பட்டன. அப்போது நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக பொறுப்பேற்றார்.

மோடி கடுமையான முடிவுகளை எடுக்கிறார் என்பது உண்மைதான். முத்தலாக், ஒரே பதவி ஒரே ஓய்வூதியம், சட்டப்பிரிவு 370 நீக்கம் என சீர்திருத்த நடவடிக்கை எடுக்க யாருக்கும் துணிவில்லை.

ஏழைகளுக்கான அரசாங்கம்

பயங்கரவாதிகள் மீது வான்வெளித் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. ஒரு வலுவான மன உறுதி கொண்ட பிரதமரால் மட்டுமே இது முடியும். நம் நாடு கடந்த காலங்களில் பாரம்பரிய சிந்தனையிலிருந்து விலகி எதிர்கொண்ட பல பிரச்சினைகளை நரேந்திர மோடி தீர்த்து வைத்தார்.

அவர் ஏழைகளுக்காக அரசாங்கத்தை நடத்துகிறார். 130 கோடி மக்கள்தொகை கொண்ட இந்தியாவை, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக முன்னேக்கிச் செல்வதே எங்கள் நோக்கம்” என்றார்.

பொதுவாழ்வில் பிரதமர் நரேந்திர மோடி 20 ஆண்டுகளை கடந்துள்ள நிலையில் அமித் ஷா தொலைக்காட்சி ஒன்றுக்கு நேர்க்காணல் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : பிரதமரின் கூற்றை நினைவுகூர்ந்த அண்ணாமலை!

ABOUT THE AUTHOR

...view details