டெல்லியின் தீன் மூர்த்தி எஸ்டேட் வளாகத்தில் ரூ. 271 கோடி செலவில் பிரதமர் அருங்காட்சியகம் கட்டப்பட்டுள்ளது. இதற்கு பிரதான்மந்திரி சங்கராலயா எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதனை பிரதமர் மோடி இன்று (ஏப். 14) திறந்து வைத்தார். முதல் டிக்கெட்டை வாங்கி அருகாட்சியத்தை பார்வையிட்டார்.
பிரதமர் அருங்காட்சியகத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி - பிரதான்மந்திரி சங்கராலயா
டெல்லியில் கட்டப்பட்ட பிரதமர் அருங்காட்சியகத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இந்த அருகாட்சியகம் பிரதான்மந்திரி சங்கராலயா எனப்படுகிறது.
pm-modi-inaugurates-prime-ministers-museum
இந்த அருங்காட்சியகத்தில் நாட்டின் 14 முன்னாள் பிரதமர்களின் புகைப்படங்கள், குறிப்புகள், பதவிக்காலத்தில் செய்த சாதனைகள், அவர்களுக்கு உலக தலைவலர்கள் அனுப்பிய கடிதங்கள், பரிசுகள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. இதனை 12 வயதுக்கு மேற்பட்டோர் பார்வையிடலாம். டிக்கெட் விலை 110 ரூபாய். ஆன்லைனில் புக் செய்தால் 100 ரூபாய் மட்டுமே. வெளிநாட்டினருக்கு ஒரு டிக்கெட்டின் விலை 750 ரூபாய்.
இதையும் படிங்க:தமிழ் சகோதர சகோதரிகளுக்கு புத்தாண்டு வாழ்த்துகள் - பிரதமர் மோடி